டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 6 ஆயிரம் பெண்களுக்கு வேலை
டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 6000 பெண்களுக்கு வேலை வழங்க 13.12.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது.;
டாட்டா எலக்ட்ரானிக்ஸ் (TATA Electronics) நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் 6000 பெண் வேலைநாடுநர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்நிறுவனத்தில் 18 வயது முதல் 20 வயது வரை உள்ள 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.15,000 (ரூபாய் பதினைந்தாயிம் மட்டும்) வீதம் வழங்கப்படும். மேலும், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவு தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.
அதற்கான நேர்காணல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் 13.12.2021 அன்று காலை 11 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, இம்முகாமில் 18 வயது முதல் 20 வயது வரை உள்ள 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற பெண்கள் மட்டும் கலந்து கொண்டு பணிநியமனம் பெற்று பயன்பெறுமாறும்,
மேலும் விவரங்களுக்கு 04329-228641 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.