தமிழகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை தொடரும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு விருகிற 7ம் தேதி வரை விதித்திருந்த முழு ஊரடங்கை பல்வேறு தளர்வுகளுடன் 14ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு நீட்டித்துள்ளது.
பொதுமுடக்க காலத்தில் மக்கள் காய்கறி, பழங்கள் வாங்க சிரமப்படாமல் இருக்க வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த திட்டம் நிறுத்தப்படும் என்று கருதப்பட்டது.
ஆனால் நடமாடும் காய்கறி விற்பனை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.