5 மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ் ,மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி. கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.;
மதுரை, கோவை, சேலம், திருப்பூர், திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: மதுரை மாநகராட்சி கமிஷனராக கே.பி.கார்த்திகேயனும், சேலம் மாநகராட்சி கமிஷனராக கிறிஸ்துராஜூம், திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக விஷ்ணு சந்திரனும் (கலெக்டரும் விஷ்ணு, ஆணையாளரும் விஷ்ணு..!!!!), கோவை மாநகராட்சி கமிஷனராக ராஜகோபால் சுங்கராவும், திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கிராந்திகுமாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(பணிகள்) ஆக - பிரசாந்த்தும், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(சுகாதாரம்) ஆக-நர்னவாரே மணிஷ் சங்கராவும், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(கல்வி) ஆக - டி.சினேகாவும் நியமிக்கப்படுகின்றனர் என தலைமை செயலர் எத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.