மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பிடிஆர் அழைப்பை ஏற்ற நிர்மலா சீதாராமன்

தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பு விடுத்ததை அடுத்து மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் தெரிவித்தார்;

Update: 2022-06-29 14:21 GMT

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் தமிழகத்தின் மதுரையில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார்.

சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் இதை அறிவித்த அவர், அடுத்த கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என்றார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பின் பேரில் மதுரையில் நடைபெறவுள்ளது .

கோவில் நகரமான மதுரையில், கேசினோக்கள், ஆன்லைன் கேமிங் மற்றும் குதிரைப் பந்தயம் மீதான ஜிஎஸ்டி பொருத்தம் குறித்த அமைச்சர்கள் குழுவின் (ஜிஓஎம்) அறிக்கையையும் ஜிஎஸ்டி கவுன்சில் விவாதிக்கும்.

Tags:    

Similar News