தமிழக காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேர் அதிரடி மாற்றம்…

தமிழக காவல் துறையில் பணிபுரிந்து வரும் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று ஒரேநாளில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-12-30 13:34 GMT

தமிழக காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது உண்டு. அந்த வகையில், தமிழக காவல்துறையில் பணிபுரியும் டிஜிபி, ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்.பி. ரேங்கில் உள்ள 20 ஐபிஎஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்தர ரெட்டி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, சென்னையில் உள்ள சிவில் சப்ளை சிஐடி பிரிவில் டிஜிபியாக பணிபுரிந்து வந்த ஆபாஷ் குமார், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாள் விடுப்பில் இருந்த டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி, தமிழ்நாடு ஊர்க்காவல் படையின் டிஜிபியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை தலைமை காவல் அலுவலகத்தில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்த வெங்கடராமன், கூடுதல் பொறுப்பாக நிர்வாக பொறுப்பையும் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலக என்போர்ஸ்மெண்ட் ஐஜியாக பணியாற்றி வந்த ஆசியம்மாள், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை காவல்துறை ஆணையாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார், சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் காவல் ஆணையராக பணியாற்றி வந்த பிரபாகரன் சென்னையில் உள்ள சமூக நலன் மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

கோயமுத்தூர் சரக டிஐஜியாக இருந்த முத்துசாமி, வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த கயல்விழி சென்னையில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கடலோர பாதுகாப்பு குழும டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த சின்னசாமி, சென்னையில் உள்ள தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வராக பணியாற்றி வந்த ராஜராஜன், சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த பிரபாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் துணை ஆணையராக பணியாற்றி வந்த செந்தில்குமார், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கலைச்செல்வன், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிஐடி சிறப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஸ்டீபன் ஜேசுபாதம், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமி துணை இயக்குனராக பணியாற்றி வந்த சிவகுமார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த முத்தரசி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ரவளி பிரியா சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநில காவல் துறை நவீன கட்டுப்பாட்டு அறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜெயலட்சுமி சென்னை ஆவடி பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ரயில்வே பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த உமா, சென்னை சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வந்த ஆரா அருளரசு சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News