போன முறை 39, இந்த முறை 40 - ஆனாலும் வடை போச்சே.... ஏமாற்றத்தில் நொந்து போன திமுக கூட்டணி எம்பிகள்!
Tamil Nadu MPs are deeply disappointed- 40 எம்பிக்கள் இருந்தும், கடந்த முறை போலவே இந்த முறையும், அமைச்சர், இணை அமைச்சர் எந்த வாய்ப்புகளும் இன்றி வெறுமனே எம்பி ஆக மட்டுமே 5 ஆண்டுகளை கழிக்க வேண்டிய நிலையில், வடை போச்சே என வடிவேலு பாணியில் புலம்பி வருகின்றனர்.;
Tamil Nadu MPs are deeply disappointed- 40 தொகுதிகளில் வெற்றி பெற்றும் ஆட்சியில் பங்கு பெற முடியாத தமிழக எம்பிகளின் நிலை! ( மாதிரி படம்)
Tamil Nadu MPs are deeply disappointed- இந்திய நாடாளுமன்ற தேர்தல், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏழு கட்டங்களாக நடந்தது. இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து, 7 கட்டங்களாக, 18வது நாடாளுமன்ற தேர்தலை மிக சிறப்பாக நடத்தி முடித்தது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலை பொருத்தவரை பாஜக, திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நடந்தது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளை திமுக காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது.
கடந்த முறை 2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றியை பெற்றுள்ளது. கடந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையோடு பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த நிலையில், இந்த முறை அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ்குமார் யாதவ் ஆகியோர் ஆதரவுடன் மூன்றாம் முறையாக ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது.
இதில் சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் யாதவ் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அதற்கான யோசனைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடு கட்சிக்கு விட்டு தர முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் அமித்ஷா மற்றும் நட்டா, அது தர முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
அதேபோல் மத்திய அமைச்சர், இணை அமைச்சர் பதவிகள் தலா மூன்று என தங்களது கட்சிக்கு அவர்கள் கேட்கும் நிலையில், இரண்டு மட்டுமே தர முடியும். அதுவும் எங்களது விருப்பப்படி தான் துறை தேர்வு இருக்கும் என்றும் பாஜக தேசிய தலைமை கூறி வரும் நிலையில், பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எப்படி இருப்பினும் இந்த முறை பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்றாலும் கடந்த முறை போலவே காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை 2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களில் வெற்றிவாகை சூடியது. ஆனால் பாஜக ஆட்சியில் பங்கு பெற முடியாத நிலையில், 39 எம்பி களும் எந்த பதவியும் பெற முடியாமல் ஐந்து ஆண்டுகளாக வெறுமனே இருந்துவிட்டு வந்தனர். டெல்லியில் சுற்றுலா பயணிகளை போல நாட்களை கடத்தி விட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக டெல்லி சென்ற பல எம்பிகள், டெல்லியில் 5 ஆண்டுகள் ஒரு சுற்றுலா பயணி போலவும், பாராளுமன்றத்திற்கு ஒரு விருந்தினர் போலவும் சென்று வந்தனர் என்பதே இதில் கசப்பான உண்மை. மக்கள் குறித்து மக்களவையில் அவர்கள் எதுவுமே பேசவில்லை. ஒரு சில எம்பிகள் மட்டுமே வாய் திறந்தனர். மற்றவர்கள், அங்கிருந்த கேண்டீனுக்கு செல்லும் போது மட்டுமே வாய் திறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் இந்த முறையும் தமிழகம் உட்பட புதுச்சேரி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரகள் டெல்லியில் 5 ஆண்டுகளை கழிக்கப் போகின்றனர்.
எந்த கட்சி எம்பி ஆக இருந்தாலும் இந்த முறையில் அவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு விருந்தாளி போல தான் பாராளுமன்றத்திற்கு சென்று வர முடியுமே தவிர எதிர்கட்சி எம்பியாக இருப்பதால், அவர்கள் எதுவுமே அங்கு சாதிக்க முடியாது. இதுவே காங்கிரஸ் ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால் அவர்கள் தமிழகத்தை சார்ந்த திமுக, காங்கிரஸ் என்று எம்பிகளுக்கு மத்திய அமைச்சர், இணை அமைச்சர் போன்ற ஓரிரு பதவிகள் கிடைத்திருக்கும். அரசு தரப்பில் ஏதேனும் முக்கிய துறைகளில் பதவிகள் ஒரு சிலருக்கு வழங்கப்பட்டு இருக்கும்.
இப்போது எதுவுமே கிடைக்காத ஒரு சூழ்நிலையில் தமிழக எம்பிகள், மிகப்பெரிய ஏமாற்றத்துடன் நாடாளுமன்றம் செல்கின்றனர்.
இதை சமூக வலைதளங்களில் பலரும் போக்கிரி படத்தில் வடிவேலு காமெடியை புகைப்படத்துடன் குறிப்பிட்டு, வடை போச்சே... என்று கலாய்த்து வருகின்றனர். மேலும் பாராளுமன்றத்தில் உள்ள கேண்டீனுக்கு கடந்த முறை 39 பேர் வந்தார்கள், இனிமேல் 40 பேர் வருவார்கள், 39 போண்டா, பஜ்ஜிக்களுக்கு பதிலாக 40 போண்டா, பஜ்ஜி போடவேண்டும் என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.