தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் துணை செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது .இதில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி குழுவின் துணைத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவராகவும் முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் தேர்வு பெற்று இருப்பதாகவும், துணை செயலாளராக அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.