தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணி யில் உள்ளது : மு.க. ஸ்டாலின் பேச்சு

ஒரகடத்தில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறப்பு

Update: 2023-06-08 10:15 GMT

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கிய தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின்.

தமிழ்நாடு தொழில்துறை மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாக  தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து விழா பேருரையாற்றினார். அப்போது, அவர் பேசுரையில்,  யார் ஒப்புக் கொண்டாலும் - ஒப்புக் கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக - தலை நிமிர்ந்து, ஏன் கம்பீரமாக இன்றைக்கு நின்று கொண்டு இருக்கிறது.தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகுக்கின்றன.

தமிழ்நாடு அரசின் Guidance Tamil Nadu அலுவலகத்தின் மூலமாக ஜனவரி 2022 முதல் மே 2023 வரை 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 279 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு 1 லட்சத்து 96 ஆயிரத்து 596 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.இந்த முதலீடுகள் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2021 – 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 613 ஆகவும்; உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து393 ஆகவும் இருந்தது.நம்மு டைய அரசு பொறுப்பேற்றதற்குப்பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக, 2022-2023-ஆம் ஆண்டில் நிறுவனங் களின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலை


வாய்ப்புகளின் எண்ணிக்கை 47 லட்சத்து 14 ஆயிரத்து 148 ஆகவும் உயர்ந்துள்ளது என்பதை நான் இங்கே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன்.

இப்படி புதிய புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன என்றால், புதியதாக தொழில்கள் தொடங்கப்படுகின்றன என்றால் என்ன பொருள் ? தமிழ்நாட்டில் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும், சூழ்நிலையும் இருக்கிறது என்று பொருள்.தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மனித ஆற்றல், இளைய சக்தி தமிழ்நாட்டில் இருக்கிறது என்று பொருள்தமிழ்நாடு அமைதி மாநிலமாக இருக்கிறது என்று பொருள்அதனால்தான், முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு அமைந்துள்ளது.

இதனை மேலும் வலுப்படுத்தவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாம் நடத்தி வருகிறோம்.மாநிலத்தின் முதன்மை திறன் மேம்பாட்டுத் திட்டமான - “நான் முதல்வன்”, திட்டம் தொடங்கப்பட்டதன் வாயிலாக தொழிற்சாலைகளுக்கு தேவையான வருங்காலப் பணியாளர் தேவை வளத்தை மேம்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

திறன்மிக்க மனிதவளம் தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து கிடைத்திடவும் தமிழ்நாட்டு இளைஞர்கள் உலக அளவில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும் இந்த அரசு, தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக பல்வேறு தொழிற்பிரிவுகளில் திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 877 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து செயல்பட்டு வருகிறது.

இது தமிழ்நாட்டு தொழிற் பயிற்சி நிலையங்களின் வளர்ச்சியில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது. இந்த மையங்களில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் இத்தகைய தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என புரிந்துணர்வு  ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், முதற் கட்டமாக 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்களை இன்று துவக்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதன் மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்து 140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடையப் போகிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்து 40 மாணவர்கள் தொழில்4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவார்கள்.இதுபோன்ற நவீன தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெறுவோருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் , குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வி. கணேசன், தொழில் துறை அமைச்சர்  டி.ஆர்.பி. ராஜா, எம்.பி .டி. ஆர். பாலு , செல்வம் , எம்எல்ஏ செல்வப் பெருந்தகை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையர் கொ. வீரராகவராவ், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர்  வாரன் ஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News