தமிழக உளவுத்துறைக்கு புதிய ஐ.ஜி.

உளவுத்துறை ஐ.ஜி. யாக இருந்த ஆசியம்மாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஐ.ஜி.யாக செந்தில்வேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

Update: 2022-07-20 15:34 GMT

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான விமர்சனங்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், உளவுத்துறையின் தோல்வி என கடுமையான குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், உளவுத்துறை ஐ.ஜி.யை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக செந்தில்வேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News