தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் இயக்குநர் குழு ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி என். சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.;
சென்னை அரசு தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில் நுட்பவியல் துறை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் 74-வது இயக்குநர் குழுக் கூட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி என். சிவகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், தகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மை செயலாளர் டாக்டர் நீரஜ் மித்தல், இ.ஆ.ப., மின் ஆளுமை இயக்குநர் கே. விஜயேந்திர பாண்டியன், இ.ஆ.ப., நிதித்துறை இணைச் செயலாளர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப., எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர் டாக்டர் அஜய் யாதவ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப. மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.