திட்டங்கள் முறையா வந்து சேருதா? பொதுமக்களுக்கு ஃபோன் போட்ட ஸ்டாலின்..!

கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேர்கிறது எனவும் இது மிக்க பயனுள்ளதாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

Update: 2024-07-04 08:45 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் 

தமிழக தலைமைச் செயலகத்திலிருந்து அரசின் பல்வேறு திட்டங்களின் பயனர்களான பொதுமக்களுக்கு ஃபோன் செய்து அவர்களின் கருத்துக்கள் குறித்து கேட்டறிந்தார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

நீங்கள் நலமா என்ற திட்டத்தில் பயனாளிகளை நேரடியாக வீடியோகால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார் முதல்வர். அப்போது கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறதா என பயனாளியிடம் கேட்டறிந்த முதல்வர், பல்வேறு கேள்விகளையும் கேட்டு தெரிந்துகொண்டார்.

முதல்வரிடம் பேசிய பயனாளியான அந்த பெண்மணி, கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேர்கிறது எனவும் இது மிக்க பயனுள்ளதாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மகளிர்க்கான இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், ஒலிம்பிக் தேடல், நான் முதல்வன், ‘நம்மை காக்கும் 48, உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் போன்ற அரசின் திட்டங்கள் குறித்தும் பயனாளிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வின்போது, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் திரு.த.மோகன், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News