நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலா?அமைச்சர் நேரு பரபரப்பு பேட்டி
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewநாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவே வராது என்று அமைச்சர் நேரு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவே வராது என்று அமைச்சர் நேரு அடித்து கூறி உள்ளார்.
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewதமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. பெரும் வெற்றி பெற்றது. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டது. முறைப்படி இன்னும் மூன்றரை ஆண்டுகள் கழித்து தான் அதாவது வருகிற 2026ம் ஆண்டு தான் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewஅதற்கு முன்னதாக அடுத்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற போகிறது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewகுறிப்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறும் என கூறி உள்ளார். அவர் எந்த அடிப்படையில் அப்படி கூறினார் என தெரியவில்லை.
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewஇதற்கிடையில் தி.மு.க.அமைச்சர்கள் மீது வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஊழல் பட்டியல் வெளியிடப்போவதாக தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறி உள்ளார். இப்படி தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது.
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewஇந்த பரபரப்பாக சூழலில் தி.மு.க. முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சியில் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவே வராது என அடித்துக்கூறி உள்ளார்.
அவரது பேட்டியை இனி பார்ப்போமா?
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewதிருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை ரூ.2 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மருத்துவ உபகரணங்களை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு கூறியதாவது:-
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewநாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருவது அவரது ஆசையாகும். அதற்கு நாங்கள் என்ன சொல்வது? அவர் நாளைக்கே தேர்தல் வரவேண்டும் என்று கூட நினைப்பார். அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா? நாடாளுமன்ற தேர்தலுடன் எப்படி தமிழக சட்டமன்ற தேர்தல் வரும்? தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரமாண்டமாக ஆட்சி நடத்தி வருகிறார். மகளிருக்கு ரூ.1000 பணத்தையும் தருகிறோம் என அறிவித்து விட்டார். இப்படி இருக்கும்போது எப்படி தேர்தல் வரும்? அதற்கு எந்த காரணமும் இல்லை.
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewஎனவே நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவே வராது. சம்பந்தப்பட்ட தேதியில் மட்டுமே வரும். எனவே அதுபற்றி பேசவேண்டியது இல்லை.அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி பிரச்சினை பற்றி நான் எதுவும் கூற முடியாது. அதுபற்றி தலைவர் தான் கூறுவார்.
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interview2024 ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிய உள்ளது. ஆதலால் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் முதல்வரின் அனுமதி பெற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் வார்டு மறு நிர்ணயம் செய்வது பற்றி ஒரு கமிட்டி அமைத்து முடிவு செய்வோம்.
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewதிருச்சியில் 3 உயர்மட்டமேம்பாலம் கட்டுவதற்கு மண் பரிசோதனை எல்லாம் முடிவடைந்து பணி தொடங்க ரெடியாகிவிட்டது. இந்த நிலையில் திருச்சி மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டம் இருப்பதால் நாங்கள் ஆய்வு செய்த பின்னர் பணியை தொடங்குங்கள் என கூறி உள்ளனர். அதன் காரணமாக அந்த பணி தற்பேது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வு செய்து முடித்ததும் உயர் மட்ட பாலம் வந்து விடும்.
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewதி.மு.க.வில் இரண்டுகோடி உறுப்பினர் சேர்ப்போம் என நான் கூறியதற்கு சாத்தியம் உள்ளது. நாங்கள் முயற்சி செய்கிறோம். தலைவர் அவர்கள் ஒரு கோடி உறுப்பினர் சேர்ப்போம் என கூறி உள்ளார். ஏற்கனவே ஒரு கோடி உறுப்பினர் உள்ளனர். அத்துடன் மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை நாங்கள் சேர்ப்போம் அந்த அடிப்படையில் தான் நான் இரண்டுகோடி உறுப்பினர் சேர்ப்போம் என்று கூறினேன். நேற்று ஒரு நாள் மட்டும் ஆயிரம் புதிய உறுப்பினர் சேர்த்தோம். இப்படி தமிழகம் முழுவதும் சேர்த்து வருகிறார்கள்.
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewதி.மு.க. ஆட்சியில் திருச்சி புறக்கணிக்கப்படுகிறது என தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 20 மாதத்தில் மட்டும் ரூ.3 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த பஸ் நிலையம், மார்க்கெட் அமைப்பதற்கு மட்டும் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே திருச்சி புறக்கணிக்கப்படுகிறது என்று கூறக்கூடாது. கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள் என பத்திரிகையாளர்கள் கூற முடியுமா?
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interviewகாவிரியில் புதிய பாலம் கட்டுவதற்கு எல்லாம் ரெடியாக இருக்கிறது. டி.பி.ஆர். முடிந்து விட்டது. இரண்டு இடங்களை மட்டும் எடுக்கவேண்டியது உள்ளது. அதில் ஒரு இடத்தில் மத்திய அரசு அலுவலகம் அமைந்து இருப்பதால் அதுபற்றி பேசி வருகிறோம். அது முடிந்ததும் கட்டுமான பணி தொடங்கும்.
Tamil Nadu assembly election along with parliamentary election, Minister Nehru hot interview20 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது.சிப்காட் வளாகத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை வர உள்ளது.10 ஆயிரம் பெண்களுக்கு இதன் மூலம் வேலை கிடைக்கும். திருச்சி மீது முதல்வருக்கு தனி பாசம் உண்டு. எனவே திருச்சி தி.மு.க. ஆட்சியில் புறக்கணிக்கப்படவில்லை. மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு முதல்வர் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.