நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல்?

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடந்தால் நன்றாக இருக்கும் என பா.ஜ.வழக்கறிஞர் அணி கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2022-11-28 10:31 GMT
வக்கீல் எஸ். மாரியப்பன்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் மாரியப்பன் வெளிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் விரும்பி வாக்களிக்கவில்லை. அ.தி.மு.க.வின் உட்கட்சி பூசல் தான் தேர்தல் தோல்விக்கும், தி.மு.க. ஆட்சி அமைவதற்கும் சாதகமாக அமைந்தது. திராவிட மாடல் என்ற பெயரில் தி.மு.க.வினர் நடத்துகின்ற அநியாயங்கள் அக்கிரமங்கள் கூத்துக்கள் சகிக்க முடியவில்லை.

இந்துக்களுக்கும் கிறிஸ்தவர் முஸ்லிம்களுக்கும் இடையே மதச்சார்பின்மை என்ற பெயரில் தி.மு.க. தொடர்ந்து பிளவு ஏற்படுத்தி வருகிறது. டாஸ்மாக் போதையில் தினமும் இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்கள் பள்ளிகள் கல்லூரிகள் அருகில் மிக எளிதாக கிடைக்கின்றது.

சமீபத்தில் விழுப்புரத்தில் பள்ளி தலைமை ஆசிரியரை 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் கஞ்சா போதையில் வெட்டிய சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது . நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும் நீட் தேர்வினால் சாதாரண சாமானிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு எளிதாக சேர முடியும் என்று நன்கு அறிந்திருந்தும் அரசியல் காரணங்களுக்காக மக்களை குழப்பி வந்த தி.மு.க.வினர் தற்சமயம் அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி மையங்களை ஏற்படுத்தி வருகின்றனர் .

கடந்த ஜூலை மாதம் முதல் தமிழ்நாடு மின்வாரியத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு மீட்டர் பெட்டி சரிவர கொள்முதல் செய்யப்படவில்லை. மாநகராட்சிகளில் உள்ளாட்சி அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு உயர்வு, பால் விலை உயர்வு என அனைத்திலும் கட்டணங்கள் உயர்வு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. தமிழ் மொழியாலும் தமிழர்களாலும் தம்மை வளர்த்துக் கொண்டுள்ள கருணாநிதி குடும்பம் மட்டுமே மிகவும் செழித்துள்ளது.

சன் டி.வி. குடும்பம் கருணாநிதி குடும்பம் வளர்ச்சிக்காகவே அரசு கேபிள் கார்ப்பரேஷன் முற்றிலுமாக முடக்கப்பட்டு வருகிறது. இதனால் வீடுகளுக்கு வழங்கப்படுகின்ற கேபிள் கட்டணத்திற்கு ரூ. 350 முதல் ரூ. 500 வரை செலுத்தும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மு. க. ஸ்டாலின் பெயரை நிலைநிறுத்தம் படி எந்த ஒரு நலத்திட்டங்களும் மக்களுக்காக செயல்படுத்தப்படவில்லை. அம்மா உணவகம் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவத்தில் மருத்துவர்கள் இல்லை. கருணாநிதி குடும்பத்திற்கு புகழ் பாடினால் அமைச்சர்களுக்கு புகழ் பாடினால் பிழைத்து கொள்ளலாம் என நினைப்பவர்கள் மட்டுமே தி.மு.க.வில் அங்கம் வகிக்கின்றனர் .

சமூக நீதி என்பது கேலிக்கூத்தாக்கிவிட்டது. முதல்வர் மு. க. ஸ்டாலின் சுயமாக சிந்திக்கும் வகையில் இல்லை. கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் ஏராளமான  வித்தியாசங்கள் உள்ளது. மு. க. ஸ்டாலின் மருமகன் மற்றும் குடும்பத்தினரின் பொம்மையாக செயல்படுகிறார். கொலை கொள்ளை கற்பழிப்பு,குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அனைத்தும் தி.மு.க. ஆட்சியில் பல மடங்கு பெருகி உள்ளது. தி.மு.க.வினரின் கட்ட பஞ்சாயத்து ராஜ்ஜியம் சிறப்பாக நடைபெறுகிறது. எனவே நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக  சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News