முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்குகள்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது;

Update: 2022-08-13 15:20 GMT

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை நீதிபதி ஏ.எம்.கான்வேகர் விசாரித்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்த வழக்குகளை மீண்டும் அவசரமாக விசாரிக்கக்கோரி மனுதாரர்கள் சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் நேற்று முறையீடு செய்யப்பட்டது.

அப்போது இது தொடர்பான ஆவணங்களை அளித்தால், விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதாக நீதிபதி தெரிவித்தார்.இந்த நிலையில், இது தொடர்பான உத்தரவு இன்று வெளியாகி உள்ளது.

அந்த உத்தரவின்படி, இனி முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட பதிவாளர் அலுவலகத்திற்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

Similar News