சென்னையில் பேருந்துகள் திடீர் நிறுத்தம்: பயணிகள் கடும் தவிப்பு

சென்னையில் மாநகரப் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.;

Update: 2023-05-29 13:03 GMT

மாநகரப்பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தறையில் தனியார் மூலம் தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து பேருந்து ஓட்டுநர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனனர்.

சென்னை ஆவடி, பூவிருந்தவல்லி, ஐயப்பந்தாங்கல் பணிமனை என பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்தில் பயணம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதேபோல் மாலை நேரம் என்பதால் வேலைக்கு சென்று திரும்புவோரும் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமலும், வேலைக்கு செல்வோரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் எதுவும் பொறுப்பேற்காத நிலையில், ஓட்டுநர்கள் தன்னிச்சையாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தொ.மு.ச. பேரவை உள்ளிட்ட அமைப்புகள் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று அறிவுறுத்தி ஓட்டுநர்கள் மீண்டும் பேருந்தை இயக்கக் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News