தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்- சிவசங்கருக்கு போக்குவரத்து துறை
தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிவசங்கருக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.;
இலாகா மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன்.
தமிழக அமைச்சரவை இன்று திடீரென மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனின் பதவி பறிக்கப்பட்டு அந்த இலாகா. தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கரிடம் வழங்கப்பட்டுள்ளது. சிவசங்கர் இதுவரை வகித்து வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எஸ் .எஸ் சிவசங்கர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குன்னம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது இதற்கான ஒப்புதலை தமிழக ஆளுநர் ரவி வழங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.