RTE சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள்: அரசு செலுத்தும் கட்டணம் எவ்வளவு?

RTE Act 2009 in Tamil-RTE சட்டத்தின் கீழ் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் அரசு செலுத்தும் கட்டணம் எவ்வளவு என்ற பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.;

Update: 2022-08-30 02:45 GMT

RTE Act 2009 in Tamil

RTE Act 2009 in Tamil-RTE மூலம் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு LKG முதல் 8-ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித் துறை செலுத்தும் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

LKG – ஆண்டு கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.12,076.85

UKG – ரூ.12,076.85

1-ம் வகுப்பு – ரூ.12,076.85

2-ம் வகுப்பு – ரூ.12,076.85

3-ம் வகுப்பு – ரூ.12,076.85

4-ம் வகுப்பு – ரூ.12,076.85

5-ம் வகுப்பு – ரூ.12,076.85

6-ம் வகுப்பு – ரூ.15,711.31

7-ம் வகுப்பு – ரூ.15,711.31

8-ம் வகுப்பு – ரூ.15,711.31

LKG முதல் 5-ம் வகுப்பு வரை ஒவ்வொரு ஆண்டும், தலா ரூ.12,076.85-ம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஒவ்வோர் ஆண்டும் தலா ரூ.15,711.31-ம் கட்டணமாக தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்குகிறது. நடப்பு கல்வியாண்டில் RTE சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1.10 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் RTE மூலம் தனியார் பள்ளிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட, தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் LKG, UKG, 1-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.12,458.94 என்று இருந்தது. இந்த ஆண்டில் ரூ.12.076.85 ஆக குறைந்தது.

2-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.12.449.15 என்று இருந்தது. ரூ.12,076.85 ஆக குறைப்பு

3-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.12,578.98 என்று இருந்தது ரூ.12,076.85 ஆக குறைப்பு

4-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.12,584.83 என்று இருந்தது ரூ.12,076.85 ஆக குறைப்பு

5-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.12,831.29 என்று இருந்தது ரூ.12,076.85 ஆக குறைப்பு

6-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.17,077.34 என்று இருந்தது ரூ.15,711.31 ஆக குறைப்பு

7-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.17.106.62 என்று இருந்தது ரூ.15,711.31 ஆக குறைப்பு

8-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.17,027.35 என்று இருந்தது ரூ.15,711.31 ஆக குறைப்பு

கட்டணத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கட்டணத்தை குறைத்து நிர்ணயம் செய்துள்ளதால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News