பள்ளி வாகனம் மோதி 2ம் வகுப்பு மாணவன் பலி: சென்னையில் சோகம்
சென்னை ஆழ்வாரி திருநகர் பகுதியில், பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.;
சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில், தனியார் பள்ளியில், 2ம் வகுப்பு மாணவர் திஷித் என்பவர் படித்து வந்தார். இன்று காலை, வழக்கம் போல பள்ளிக்கு வேனில் சென்று, அங்கு இறங்கியுள்ளார். பின்னர், விட்டுச்சென்ற பொருளை எடுப்பதற்காக, திஷித் வேனிற்கு சென்றுள்ளார்.
அப்போது, பின்னோக்கி வந்த வேன், எதிர்பாராதவிதமாக மாணவர் மீது மோதி விபத்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே, மாணவர் திஷித் பலியானார்.
தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த போலீசார், வாகன ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம், சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.