தஞ்சையில் பிரபல தனியார் நட்சத்திர விடுதிக்கு சீல் - பரபரப்பான பின்னணி

ரூ. 12 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, தஞ்சை நகரில் உள்ள பிரபலமான டெம்பிள் டவர் என்ற தனியார் நட்சத்திர விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2021-12-27 03:15 GMT

சீல் வைக்கப்பட்ட நட்சத்திர விடுதி. 

எட்டாவது உலக தமிழ் மாநாடு தஞ்சையில், கடந்த  1994 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதற்காக வெளியூரில் இருந்து வரும் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் தங்குவதற்கு,  அப்போது தஞ்சையில் போதுமான நட்சத்திர விடுதி இல்லாத காரணத்தினால், மாவட்ட நிர்வாக சார்பாக தனியார் விடுதிகள் கட்டுவதற்கு சலுகைகள் வழங்கப்பட்டன.

அதன் அடிப்படையில் 07.06.1994 அன்று தஞ்சை மணிமண்டபம் அருகே,  அரசு நிலத்தில் 30 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் செல்வராஜ் என்பவர் விடுதி கட்ட அனுமதி வழங்கப்பட்டது. எனினும், அவர் அரசு அனுமதி இன்றி அந்த ஒப்பந்தத்தை வேறு ஒருவரான வெங்கடாச்சலம் என்பவருக்கு மாற்றியுள்ளார். மேலும் ஒப்பந்த காலம் முடிந்து அரசுக்கு 12 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

விடுதி சீல் வைத்த அதிகாரிகள்.

இதனையடுத்து,  மாவட்ட நிர்வாகம் சார்பில் 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும் இடத்தை ஒப்படைக்குமாறு வருவாய்த்துறை சார்பில்,  நீதிமன்றம் மூலம் 2019 ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் விடுதி நிர்வாகம் எந்த பதிலும் அளிக்காததால், இன்று அதிகாலை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆனையர் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறை உதவியுடன் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, விடுதியில் 10க்கும் மேற்பட்ட அறைகளில் தங்கியிருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றுப்பட்டனர்.

Tags:    

Similar News