'ஸ்டாலின் ஒரு பொம்மை முதல் அமைச்சர்'- எடப்பாடி பழனிசாமி கண்டு பிடிப்பு

'ஸ்டாலின் ஒரு பொம்மை முதல் அமைச்சர்'- என எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பாக பேசினார்.

Update: 2022-09-16 11:03 GMT

செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும்,தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது தமிழகத்தில் விடியா தி.மு.க.அரசு மின் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை பல மடங்காக உயர்த்தி உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் அதிகாரம் மையமாக செயல்பட்டு வருகிறார்கள். ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர் ஆக உள்ளார். அரசின் முக்கிய முடிவுகளை அவரது மனைவி, மருமகன், மகன் ஆக்கியோர் எடுக்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் அல்ல நான்கு முதல் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றார்.

Tags:    

Similar News