எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம்: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு..!

News For School Students -எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவியர் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2022-06-24 04:53 GMT

பள்ளி மாணவிகள் (கோப்பு படம்)

News For School Students - தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20 ம் தேதி வெளியானது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை அறிவித்தார். பத்தாம் வகுப்பில் மொத்தம் 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 96.32 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதேபோல 90.96 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2பொதுத்தேர்வி மொத்தம் 93.76 சதவிகித பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதனையடுத்து மேற்படிப்பை தொடரும் வகையில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . காலை 11 மணி முதல் பிறந்ததேதி ,பதிவு எண் விவரத்தை அளித்து www.dge.tn.nic.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News