ஸ்ரீநகர் தீவிரவாத தாக்குதல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் -முதல்வர் ஸ்டாலின்

Update: 2021-12-14 15:53 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி பாராளுமன்ற கட்டிடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர், இந்த சமயத்தில் நேற்று தாக்குதல் நடத்துள்ளது கவனிக்கத்தக்கது.

நேற்று ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ஜெவானில் உள்ள பந்தா சவுக்கில் ஒரு போலீஸ் பேருந்து மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேற்று மாலை 6 மணியளவில், ஜம்மு காஷ்மீர் ஆயுதப்படை காவல்துறையின் ஒன்பதாவது பட்டாலியனின் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஜெவானில் உள்ள காவல் பயிற்சி முகாம் அருகே வந்தது.

அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 போலீசார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர், மருத்துவமனையில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர். காயமடைந்த 12 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை ஒரு போலீசார் உயிரிழந்தார், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 11 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய சமூக வலைத்தளப் பக்கங்கள் வாயிலாக கண்டனச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

ஸ்ரீநகர் அருகே காவல்துறைப் பேருந்தின் மீது நடத்தப்பட்டுள்ள கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன். இந்தக் கொடுஞ்செயலுக்கு எனது கண்டனத்தைப் பதிவுசெய்வதோடு, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்ற காவலர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News