ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் அறிவிப்பு

ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்திபெற்ற அம்மன் திருக்கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான அறிவிப்பை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்

Update: 2022-07-15 06:27 GMT

தமிழ்நாட்டு பக்தர்கள் தெய்வ வழிபாட்டை தோன்றுதொட்ட போற்றி வருகின்றனர். குறிப்பாக பல்வேறு திருக்கோவிலுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரிதும் விரும்புவர்.

இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோவிலுக்கு சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்து எதிர்வரும் ஆடி மாதம் பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா எற்பாடு செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஆடி மாதம் சென்னை ,திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது .

  • சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில், ராயபுரம் அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோயில் உள்ளிட்ட ஒன்பது திருக்கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் ,
  • சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோயில் , மயிலாப்பூர் அருள்மிகு முண்டக கன்னியம்மன் திருக்கோயில், மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட 10 கோவில்களுக்கு இரண்டாவதாக ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு திருச்சி, தஞ்சாவூர், மதுரை ,ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பயணத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்மீக சுற்றுலா பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு திருக்கோவில் பிரசாதம், திருக்கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும்.

பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா தொடர்பாக சுற்றுலா துறையில் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு https://www.ttdconline.com/login.jsp என்ற சுற்றுலாத் துறை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

Similar News