திருச்சி, கரூர் வழியாக காரைக்குடியில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்

திருச்சி, கரூர் வழியாக காரைக்குடியில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-08-11 13:01 GMT

பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, மைசூர் – காரைக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில் எண்.06295 மைசூர் -காரைக்குடி சிறப்பு ரயில் மைசூரிலிருந்து 14.08.2024 & 17.08.2024 ஆகிய தேதிகளில் 21.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.

ரயில் எண்.06296 காரைக்குடி- மைசூர் சிறப்பு ரயில் காரைக்குடியில் இருந்து 15.08.2024 & 18.08.2024 ஆகிய தேதிகளில் 19.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 09.10 மணிக்கு மைசூர் சென்றடையும்.

இந்த ரயில்களில் ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் கோச்சுகள் இருக்கும்ங

நிறுத்தங்கள்: மாண்டியா, மத்தூர், ராமநகரம், கெங்கேரி, கேஎஸ்ஆர் பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை.

ரயில் எண்.06295 மைசூர் காரைக்குடி சிறப்பு ரயில்:

(15 & 28 ஆகஸ்ட், 2024 அன்று) சேலம் 05.40 / 05.50 மணி; நாமக்கல் 06.38 / 06.40 மணி; கரூர் 07.08/07.10 மணி.

ரயில் எண்.06296 காரைக்குடி மைசூர் சிறப்பு ரயில்:

(15 & 18 ஆகஸ்ட், 2024 அன்று) கரூர் 22.10 / 22.12 மணி; நாமக்கல் 22.43/22.45 மணி; சேலம் 23.45 / 23.50 மணி. இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் கோட்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில் மேற்கண்டவாறு நின்று ச செல்லும்.

Tags:    

Similar News