மைசூர் -செங்கோட்டை இடையே திருச்சி, கரூர் வழியாக சிறப்பு ரயில்

மைசூர் -செங்கோட்டை இடையே திருச்சி, கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-08-23 15:00 GMT

பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, மைசூர் – செங்கோட்டை இடையே திருச்சி, கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

ரயில் எண்.06241 மைசூர் செங்கோட்டை சிறப்பு ரயில் மைசூரிலிருந்து 04.09.2024 & 07.09.2024 ஆகிய தேதிகளில் 21.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 16.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

ரயில் எண்.06242 செங்கோட்டை மைசூர் சிறப்பு ரயில் செங்கோட்டையில் இருந்து 05.09.2024 & 08.09.2024 ஆகிய தேதிகளில் 19.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 14.20 மணிக்கு மைசூரை சென்றடையும்.

ஏ.சி.இரண்டு அடுக்கு ஏ.சி மூன்றடுக்கு.ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் கோச்சுகள். ஒதுக்கீடு செய்யப்படும்.

ராமநகரம், கெங்கேரி, கே.எஸ்.ஆர்.பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சங்கரன் கோவில், பம்பா,கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி.

ரயில் எண்.06241 மைசூர் செங்கோட்டை சிறப்பு ரயில்:

(05 & 08 செப்டம்பர், 2024 அன்று) சேலம் 05.40/05.50 மணி; நாமக்கல் 06.38/06.40 மணி; கரூர் 07.08 / 07.10 மணி அளவில் நின்று செல்லும்.

ரயில் எண்.06242 செங்கோட்டை – மைசூர் சிறப்பு ரயில்:

  (06 & 09 செப்டம்பர், 2024 அன்று) கரூர் 03.28/03.30 மணி; நாமக்கல் 04.03/04.05 மணி; சேலம் 04.50 / 05.00 மணி அளவில் நின்று செல்லும்.

இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News