பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க ஹூப்பள்ளி- ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்
பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க ஹூப்பள்ளி -ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
பயணிகளின் கூடுதல் நெரிசலைக் கருத்தில் கொண்டு, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, ஹூப்பள்ளி (கர்நாடகா) – ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
ரயில் எண்.07355/07356 ஹுப்பள்ளி ராமேஸ்வரம் – ஹூப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில்கள் தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படுகிறது.
ரயில் எண்.07355 ஹூப்பள்ளி -ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் 06.04.2024 முதல் 29.06.2024 வரை சனிக்கிழமைகளில் 06.30 மணிக்கு ஹூப்பள்ளியில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் 06.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
ரயில் எண்.07356 ராமேஸ்வரம் – ஹூப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் 07.04.2024 முதல் 30.06.2024 வரை 21.00 மணிக்குப் புறப்பட்டு திங்கள்கிழமைகளில் ஹுப்பள்ளியை 19.25 மணிக்கு சென்றடையும்.
பெட்டிகள்: ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் கோச்சுகள்.
Stoppages: Haveri, Ranibennur, Harihar, Davanagere, Chikjajur, Birur, Arsikere, Tumkur, Banaswadi, Hosur, Dharmapuri, Salem, Namakkal, Karur, Tiruchchirappalli, Pudukkottai, Karaikkudi, Manamadurai and Ramanathapuram.
சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நேரங்கள்: ரயில் எண்.07355 ஹூப்பள்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்:(சனிக்கிழமைகளில்) சேலம் 19.45/19.55 மணி; நாமக்கல் – 20.44/20.45 மணி; கரூர் – 21.58/ 22.00 மணி.
ரயில் எண்.07356 ராமேஸ்வரம் – ஹுப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில்:(திங்கட்கிழமைகளில்) கரூர் 03.48/03.50 மணி; நாமக்கல் 04.19/04.20 மணி; சேலம் 05.40/05.50 மணி.
மறு அறிவுரை வரும் வரை பாம்பன் ரயில் பாலம் வழியாக ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால், ஹூப்பள்ளி- ராமேஸ்வரம் – ஹூப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில்கள் ராமநாதபுரம் -ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹூப்பள்ளி- ராமநாதபுரம் – ஹூப்பள்ளி இடையே மட்டும் இயக்கப்படும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.