மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை : அரசு அறிவிப்பு, அப்படி என்னங்க அது ?
பேருந்தில் மாற்றுத்திறனாளியுடன் ஒருவர் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.;
இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிப்பதாவது :
மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது, பேருந்தைமுறையாக நிறுத்தி மாற்றுத் திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். ஓட்டுநர் பேருந்து நிற்பதற்கு என அறியப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில்தான் பேருந்தை நிறுத்த வேண் டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் பயணிகள் வேறு யாராவது அமர்ந்து இருந்தால் அவர்களை இருக்கையில் இருந்து எழசெய்து மாற்றுத்திறனாளியை அமரவைக்க வேண்டும். மாற்றுத்திற னாளி பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் செய்யக்கூடாது.
இந்திய அரசு அறிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டையின் அசல் அட்டை கொண்டு 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் கட்டண மில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி 75 சதவிகித பயண கட் டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.