நிதி அமைச்சர் தலைமையில் மாநில அளவிலான வங்கியாளர் குழு சிறப்புக் கூட்டம்
2022-23 ஆம் நிதியாண்டின் தமிழ்நாட்டில் நிதிநிலை அறிக்கைக்காக வங்கியாளர்களுடன் கலந்தாலோசித்து, பரிந்துரைகளை பெற்றார் நிதிஅமைச்சர்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தலைமையில், முதலமைச்சர் அறிவுரையின்படி, இன்று தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அரசுத் திட்டங்களில் வங்கிகளின் செயல்பாடு குறித்து நிதி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் இக்கூட்டத்தில் வலியுறுத்தி பேசியதாவது :
- அனைத்து வங்கிகளின் ATM, படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும்.
- வங்கியின் உதவி மையங்கள் மற்றும் பொது மக்களுடன் தொடர்பில் இருக்கும் அலுவலர்கள் தமிழ் நன்கு அறிந்திருக்க வேண்டும்
- முன்னுரிமைத் துறைகளுக்கு கடன் வழங்கும் திட்டங்களை முனைப்பாகச் செயல்படுத்த வேண்டும்
- குறிப்பாக, ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி உதவிட வேண்டும்
- வங்கி வசதிகள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில், குறிப்பாக வன மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் வங்கி வசதிகள் வழங்க வேண்டும்.
என வங்கிகளை வலியுறுத்தி பேசினார்.
முதல் முறையாக, வரும் 2022-23 ஆம் நிதியாண்டின் தமிழ்நாட்டில் நிதிநிலை அறிக்கைக்காக வங்கியாளர்களுடன் கலந்தாலோசித்து, பரிந்துரைகள் பெறப்பட்டன.
நா.முருகானந்தம், அரசு கூடுதல் தலைமைச் செயலர், நிதித்துறை, பார்த்தா ப்ரதிம் சென்குப்தா மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தலைவர், மாநில அளவிலான வங்கியாளர் குழு, திரு. SMN ஸ்வாமி, மண்டல இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை, V. அருண்ராய், அரசுச் செயலர் (செலவினம்), நிதித்துறை மற்றும் நிதித்துறை மற்றும் வங்கிகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.