மக்களவைத் தேர்தலுக்காக 10,214 சிறப்புப் பேருந்துகள்

தேர்தலுக்காக 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது எனவும், தேர்தலுக்குப் பின்னர் 8,304 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது

Update: 2024-04-09 01:50 GMT

சிறப்பு பேருந்துகள் - கோப்புப்படம் 

போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல், எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது, போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 1,825 சிறப்புப் பேருந்துகளும் இரண்டு நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 6,009 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 8,304 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம்

திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.

வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்

தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள்.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு

கிழக்கு கடற்கரை சாலை வழியாக (SETC உட்பட) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, புதுச்சேரி, கடலூர் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் மற்றும் பூவிருந்தவல்லி வழியாக காஞ்சிபுரம்,செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி , கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம்

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.

முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 

இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 3 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

Tags:    

Similar News