விழித்துக் கொள்ளுமா ரயில்வே துறை?

பயணிகளிடம் பயணசீட்டோ, அடையாள அட்டையோ பரிசோதகர்கள் கேட்காததால் முறைகேடு நடக்க வாய்ப்பு

Update: 2021-06-22 00:52 GMT

ரயில் மாதிரி படம் 

முன்பெல்லாம் ரயில் பயணத்தில் பரிசோதகர் டிக்கெட்டை சரிபார்த்து, அடையாள அட்டையையும் சரிபார்ப்பது வழக்கம். ஆனால் தற்போதைய கொரோனா காலகட்டத்தில் அனைத்தும் மாறிவிட்டது. 

முன்பதிவு செய்த பயணிகளிடம் பரிசோதகர் இருக்கை எண்ணை மட்டுமே கேட்கிறார். பயணசீட்டோ அல்லது பெயரையோ கேட்பதில்லை. அவர்தான் அந்த பயணி என்றும் சோதனையிடுவதில்லை என்ற குற்றசாட்டு எழும்பியுள்ளது. . இவ்வாறு இருந்தால், யார் வேண்டுமானாலும் எந்த டிக்கெட்டிலும் பயணிக்கலாமே? 

கொரோனா காலத்தில், ரயில்வே பரிசோதகர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் அதற்காக பயணியின் பெயரையோ அல்லது பயணசீட்டையோ கேட்காமல் இருப்பது டிராவல் ஏஜண்டுகள் டிக்கட்டுகளை மொத்தமாக வெவ்வேறு பெயர்களில் முன்பதிவு செய்து போலி நபர்கள் பயணிக்க வசதியாக இருக்கும் என்பதே நிதர்சனம்.

பரிசோதகர்கள் பயணசீட்டை கையில் வாங்க வேண்டாம். அடையாளஅட்டையை தொடக்கூட வேண்டாம். குறைந்தபட்சம் அவர்களது பயணசீட்டையோ அல்லது அடையாள அட்டையையோ கேட்டால் முறைகேடு நடக்க வழியிருக்காது.

இதுபோன்று அனைத்து தடங்களிலும் பரிசோதகர்கள் இருக்கை எண்ணை மட்டுமே கேட்பதாக தெரியவருகிறது.

விழித்துக்கொள்ளுமா ரயில்வே நிர்வாகம்?

Tags:    

Similar News