கியூட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய சட்டசபையில் தனித்தீர்மானம்

மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை எதிர்த்து சட்டசபையில் தனித்தீர்மானம் தாக்கல்

Update: 2022-04-11 06:18 GMT

கோப்புப்படம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.

மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

அந்த தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை என்பது ஏற்புடையதல்ல. நுழைவு தேர்வானது கல்வி முறையை ஓரங்கட்டிவிட்டு பயிற்சி மையங்களை நாட வேண்டிய தேவையை ஏற்படுத்திவிடும் என முதல்வர் தெரிவித்தார்.

Tags:    

Similar News