மக்களவை தேர்தல்: கையெழுத்தானது திமுக - காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது;

Update: 2024-03-18 08:47 GMT

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் முடிவானது

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிடும் ஒன்பது தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீடு:

ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையின்போது, காங்கிஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் உடன், புதுச்சேரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மக்களவைத் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன.

கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக, இந்த முறை மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் நெல்லை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் புதியதாக களம் காண்கிறது. மற்றபடி, கடந்த தேர்தலில் போட்டியிட்ட 6 தொகுதிகளில் தொகுதிகளில் காங்கிரஸ் மீண்டும் களம் காண்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் புதுச்சேரி உள்ளிட்ட10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகை தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக போட்டியிட உள்ள 21 தொகுதிகள்:

கூட்டணி கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு இறுதியானதை தொடர்ந்து, திமுக போட்டியிட உள்ள 21 தொகுதிகள் எவை என்பது உறுதியாகியுள்ளது.

1.வடசென்னை

2.தென்சென்னை

3.மத்திய சென்னை

4.ஸ்ரீபெரும்புதூர்

5.காஞ்சிபுரம் (தனி)

6.அரக்கோணம்

7.வேலூர் மக்களவை

8.தர்மபுரி மக்களவை

9.திருவண்ணாமலை

10.ஆரணி

11.கள்ளக்குறிச்சி

12.சேலம்

13.ஈரோடு 

14.நீலகிரி (தனி)

15.கோயம்புத்தூர்

16.பொள்ளாச்சி

17.தேனி

18.பெரம்பலூர்

19.தஞ்சாவூர்

20.தூத்துக்குடி

21.தென்காசி (தனி)

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்துள்ளது. ஏற்கனவே சில கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள தொகுதிகளுக்கும் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். அதைதொடர்ந்து, மார்ச் 20ம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது. 27ம் தேதியுடன் வேட்புமனுதாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைய உள்ளது.

அதேநேரம், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணியும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் பல்வேறு சிறிய கட்சிகள் இணைந்துள்ளன. அதேநேரம், விரைவில் அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News