மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் நிரந்தர நீக்கம் -கல்வித்துறை அமைச்சர் அதிரடி
பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் -அமைச்சர் அன்பில் மகேஸ்;
சமீப காலமாக பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து வரும் செயல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 'வரும் கல்வியாண்டில் பாட வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு நீதிபோதனை வகுப்புகள் நடத்தபடும்.
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக்கூடாது பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டுவருவது முற்றிலும் தடுக்கபப்டும்.
மாணவர்கள் வகுப்பறைகளில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சான்றிதழ்களில் காரணம் குறிப்பிட்டு பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.