திங்களன்று திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள்( ஜுன் 13) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-06-11 13:21 GMT

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் கொரோனா பரவல் காராணமாக குறைந்த நாட்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், இந்த ஆண்டு கட்டாயம் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

அதன்படி கோடை விடுமுறை முடிந்து வருகிற 13-ஆம் தேதி நாளை மறுநாள் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வளாகங்களை தூய்மை செய்வது, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது ஆகிய பணிகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்து வந்தது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News