அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா பரபரப்பு முதல் அறிக்கை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா பரபரப்பாக முதன் முதலாக ஒரு அறிக்கை வௌியிட்டு உள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.விலிருந்து வி. கே. சசிகலா நீக்கப்பட்டார். அவர் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்காக எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. பலம் பெற்றிட வி. கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டது.
இது அ.தி.மு.க.வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பன்னீர்செல்வம் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் அதே நேரத்தில் அ.தி.முக. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தனியாக ஆலோசனை நடத்தினார்.ஆனால் இந்த விவகாரம் பற்றி ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இதுவரை வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் சசிகலா தென்மாவட்டங்களில் தொண்டர்களை சந்திப்பதற்காக புறப்பட்டு சென்றார். அப்போது ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா சசிகலாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து ஓ. ராஜா அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பான சூழலில் வி. கே. சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் இன்று முதன்முதலாக ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டிருப்பதாவது:-