ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா மீண்டும் சபதம்

கடந்த 4 ஆண்டுகளாக என் மனதில் உள்ள பாரத்தை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இறக்கி வைத்தேன்: சசிகலா

Update: 2021-10-16 11:06 GMT

அதிமுகவின் 50- வது ஆண்டு தொடக்க விழா நாளை நடக்கவுள்ள நிலையில், இன்று அதிமுக கொடி பறக்க காரில் வந்த சசிகலா, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருவது இதுவே முதல் தடவையாகும்.

ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், சசிகலா செய்தியாளர்களிடம் பேசியதாவது :

"நான் ஏன் தாமதமாக இங்கு வந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஜெயலலிதாவுடன் நான் இருந்த காலங்கள் என் வயதின் முக்கால் பகுதியாகும். நான் என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதாவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன்.

அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ஜெயலலிதாவிடம் சொல்லிவிட்டு வந்தேன். ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் தமிழக மக்களுக்காகவும் தொண்டர்களுக்காகவும் வாழ்ந்தவர்கள். நிச்சயம் தொண்டர்களையும் கழகத்தையும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புறப்படுகிறேன். என்றார்.

Tags:    

Similar News