சம்பா பயிர் காப்பீடு 22ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

சம்பா நெல்பயிரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-11-16 04:50 GMT

சம்பா நெல்பயிரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தஞ்சாவூர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் வேளாண் இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல்வர் வடகிழக்கு பருவமழையினை தொடர்ந்து தாளடி நெல் சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 22 வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடிய காலங்களில் காப்பீடு செய்திட வழிவகை இல்லாத போதும், விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சம்பா தாளடி நெல் பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 22 வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது.

எனவே நமது வட்டார விவசாயிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயிர் காப்பீட்டு பணியினை உடனடியாக மேற்கொண்டு பயன்பெற மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார்.

மேலும் ஒரே கிராமத்தில் கடந்த மூன்று வருடங்களில் தொடர் சாகுபடியில் இருந்து இந்த வருடம் 75 சதவீதத்துக்கு அதிகமான பரப்பு விதைப்பு அல்லது நடவு தோல்வி ஆகும் பட்சத்தில் அந்த கிராமம் முழுமைக்கும் 25 சதவீத காப்பீட்டு தொகையை முன்கூட்டியே பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் அரசின் வழிகாட்டுதல்படி உடனடியாக உங்கள் பயிரினை காப்பீடு செய்து பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் மதிப்பு கேட்டுக் கொண்டார். காப்பீடு குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்களை அணுகிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News