மாநகராட்சி மேயர், கவுன்சிலர்களுக்கு சம்பளம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Salary to Corporation Mayor, Councillors: Chief Minister Stalin's order

Update: 2023-07-13 13:14 GMT

முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு சம்பளம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நகராட்சிகள், 600க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சிகளுக்கு மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தலைவர் உள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட்டு வரும் இவர்கள் தங்களுக்கு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல் சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். குறிப்பாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா தலைமையில் தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மாநகராட்சி மேயர்களுக்கு ரூ.30 ஆயிரம், துணைமேயருக்கு ரூ.15 ஆயிரம், மாமன்ற  உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரம், நகராட்சி தலைவர்களுக்கு ரூ.15 ஆயிரம், துணை தலைவருக்கு ரூ.10 ஆயிரம், உறுப்பினர்களுக்கு ரூ5 ஆயிரம், பேரூராட்சி தலைவர்களுக்கு ரூ.10 ஆயிரம், துணை தலைவர்களுக்கு ரூ.5 ஆயிரம், உறுப்பினர்களுக்கு ரூ.2500 சம்பளம் மதிப்பூதியம் என்ற பெயரில் வழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை மாதம் முதல் இந்த மதிப்பூதியம் கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்து உள்ளார். முதல்வர் பிறப்பித்து உள்ள இந்த உத்தரவு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News