சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: சைதை துரைசாமி மகன் மாயம்

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற கார், இமாச்சல் மாநிலம் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.வெற்றியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.;

Update: 2024-02-05 04:29 GMT

சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றிருந்தார். அவர்கள் சென்ற இன்னோவா கார் ஆனது எதிர்பாராத விதமாக, நேற்று மாலை கின்னவுர் பகுதியில் சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரை இயக்கிய ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆற்றில் விழுந்த ஆனால் வெற்றி துரைசாமி எங்கிருக்கிறார் என்று தெரியாததால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை இமாச்சல பிரதேச போலீசார் தமிழ்நாடு போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு குழு உதவி உடன் வெற்றிதுரைசாமியை தேடும் பணி நடந்து வருகிறது.

இமாசலப் பிரதேசத்தில், கஷங் நாலா என்ற இடத்தில் வெற்றி துரைசாமி உள்பட 3 பேர் சென்ற இன்னோவா சார், நிலைதடுமாறி சாலையோரம் இருந்த சட்லஜ் ஆற்றில் விழுந்துள்ளது. இதில், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயத்துடன் மீட்கப்பட்டவர் கோபிநாத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சடலமாக மீட்கப்பட்ட கார் ஓட்டுநர் தஞ்ஜின் காஜா பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது.

அதேவேளையில், சற்று முன் கிடைத்த தகவலில், சைதை துரைசாமி மகன் வெற்றி பத்திரமாக இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

Tags:    

Similar News