விண்வெளியில் இருந்து திரும்பும் ரஷ்ய திரைப்படக் குழு

விண்வெளியில் முதல் திரைப்படத்தை படமாக்கிய பிறகு ரஷ்ய திரைப்படக் குழு இன்று பூமிக்குத் திரும்புகிறது

Update: 2021-10-17 06:06 GMT

ரஷ்ய திரைப்பட குழு

விண்வெளியில் முதல் திரைப்படத்தை படமாக்கிய பிறகு ரஷ்ய குழு பூமிக்குத் திரும்புகிறது.  திரைப்படத்தின் கதை, அதன் பட்ஜெட் போலவே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது, ஒரு விண்வெளி வீரரை காப்பாற்ற சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு பெண் அறுவை சிகிச்சை நிபுணரை மையமாகக் கொண்டது.

விண்வெளியில் படமாக்கப்படும் முதல் படத்தின் படப்பிடிப்பை 12 நாட்கள் முடித்துக்கொண்டு ரஷ்ய நடிகையும் இயக்குநரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பூமிக்குத் திரும்புகின்றனர்.

இந்த திட்டம் சரியாக இருந்தால், ரஷ்ய குழுவினர் கடந்த ஆண்டு "மிஷன் இம்பாசிபிள்" நட்சத்திரம் டாம் குரூஸ் நாசா மற்றும் எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியோரின் ஹாலிவுட் படத்தை முறியடிப்பார்கள்.

நடிகை யூலியா பெரெசில்ட், 37, திரைப்பட இயக்குனர் கிளிம் ஷிபென்கோ, 38, மற்றும் மூத்த விண்வெளி வீரர் அன்டன் ஷ்காப்லெரோவ் ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் இருந்து' "தி சாலஞ்ச் " படப்பிடிப்பிற்காக கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் ஏவுதளத்தில் விண்ணில் பறந்தனர்.

49 வயதான ஷ்காப்லெரோவ் மற்றும் ஏற்கனவே விண்வெளி மையத்தில் உள்ள இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்த படத்தில் சிறிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இவை அனைத்தும் சுலபமாக முடியவில்லை. ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்தனர். இந்த மாத தொடக்கத்தில் படக் குழு விண்வெளி மையத்தில் இணைந்ததால், ஷ்காப்லெரோவ் ஆட்டோமாடிக் கட்டுப்பாட்டிற்கு மாற வேண்டியிருந்தது.

ரஷ்ய விண்வெளி கட்டுப்பட்டு மையம், வெள்ளியன்று, சோயுஸ் எம்எஸ் -18 விண்கலத்தில் குழுவினரை மீண்டும் பூமிக்கு அனுப்ப சோதனை செய்தபோது, விண்கலம் எதிர்பாராத விதமாக நிலைகுலைந்து, விண்வெளி மையத்தை 30 நிமிடங்கள் நிலைகுலையச் செய்தாலும், திட்டமிட்டபடி புறப்பட்டனர்.

பெரெசில்ட் மற்றும் ஷிபென்கோ சனிக்கிழமை மாலை விண்வெளி மைய குழுவினரிடம் விடைபெற்றனர். கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி வீரர் ஒலெக் நோவிட்ஸ்கி மேற்பார்வையில் அவர்கள் ஞாயிறு 0436 மணிக்கு கஜகஸ்தானில் தரையிறங்குவர். அவர்கள் தரையிறங்குவது படமாக்கப்பட்டு, திரைப்படத்தில் இடம்பெறும்,

இந்த திட்டம் வெற்றிகரமாக இருந்தால், ரஷ்யாவின் விண்வெளித் துறையின் முதல் பட்டியலின் நீண்ட பட்டியலில் சேர்க்கப்படும். சோவியத் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை ஏவியது, விண்வெளிக்கு முதல் விலங்கான லைகா எனும் நாயை அனுப்பியது, முதல் மனிதனாக யூரி ககரின் மற்றும் முதல் பெண், வாலண்டினா தெரேஷ்கோவா ஆகியோர் விண்வெளிக்கு சென்று திரும்பினர்

Tags:    

Similar News