வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவித்தால் வெகுமதி: தமிழக அரசு அறிவிப்பு
வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.;
இதுகுறித்து தமிழக அரசின் வணிக வரித் துறை செயலாளர் ஜோதி நிர்மலா வெளியிட்ட செய்தி குறிப்பில், 2022 -23 ஆம் நிதியாண்டில் வணிகவரித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு குறித்து வணிகவரித் துறைக்கு தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கும், வரிஏய்ப்பை கண்டுபிடித்து வரி வசூல் செய்யும் வணிகத் துறை அலுவலர்களுக்கு வெகுமதி வழங்க நடப்பாண்டில் 1.65 நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பொதுமக்கள் இது குறித்து தகவல் தெரிவிப்பதன் மூலம் , வரிவசூல் செய்யும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இழப்பு தொகையில் 10% வெகுமதியாக தரப்படும்.
அதேபோல இடைக்கால வெகுமதியாக 5 சதவீதமும் அல்லது 10 ஆயிரமும் வழங்கப்படும் .
4 லட்சம் மேல் தருவதாக இருப்பின் வணிகவரி துறையின் ஆணையரின் பரிந்துரைகள் ஒப்புதலின் பேரில், அரசு அலுவலராக இருப்பின் தனிப்பட்ட அதிகாரிக்கான வெகுமதிகள், ஒரு லட்சத்துக்கு மிகாமல் வழங்கப்படும்.
வெகுமதியாக 4 லட்சம் வரை தனிப்பட்ட அதிகாரி அல்லது அவரது குழுவிற்கு வணிகவரித்துறை ஆணையரின் சிபாரிசின் பேரில் வழங்கப்படும். ஒரு நபருக்கு இதன் மூலம் 10 லட்சம் வரை வெகுமதி பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.