தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில், நிதித்துறை தொடர்பான ஆண்டிடை திறனாய்வுக் கூட்டம் (Mid Term Review Meeting) நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் இன்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில், நிதித்துறை தொடர்பான ஆண்டிடை திறனாய்வுக் கூட்டம் (Mid Term Review Meeting) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.