வேலைவாய்ப்பு பதிவு-புதுப்பிக்க தவறியவர்கள்- தமிழகஅரசு சலுகை அறிவிப்பு

1.1.2017 முதல் 31.12.2019 வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு 25.8.21 வரை புதுப்பிக்க அவகாசம் வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது;

Update: 2021-05-28 16:10 GMT
வேலைவாய்ப்பு பதிவு-புதுப்பிக்க தவறியவர்கள்- தமிழகஅரசு சலுகை அறிவிப்பு
  • whatsapp icon

1.1.2017 முதல் 31.12.2019 வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு 25.8.21 வரை புதுப்பிக்க அவகாசம் வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் ௨ மாதத்திற்குள் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் சலுகையை அரசு அறிவித்துள்ளது.வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்ததை புதுப்பிக்கத் தவறியவர்கள், அரசு வழங்கியுள்ள சலுகை கால அவகாசத்தை பயன்படுட்தி புதுப்பித்துக் கொள்ளும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை புதுப்பிக்க வேண்டியது அவசியம். அப்படி 2017 முதல் 2019ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத் தவறியவர்கள், ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் சிறப்பு சலுகையை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி 1.1.2017 முதல் 31.12.2019 வரை உள்ள காலகட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள், தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து அதாவது 25.8.21 க்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் ஒரே ஒரு முறை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு அதற்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News