தமிழகம் முழுவதும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-09-14 15:25 GMT

தென்காசி மாவட்டம் தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், உட்பட தமிழகத்தின் பல்வேறு நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது பற்றிய விபரமாவது:- கம்பம் நகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார், சின்னமனூருக்கும், சின்னமனூர் சுந்தர்ராஜன், கம்பத்துக்கும், குழித்துறை ராமச்சந்திரன், தென்காசி நகராட்சிக்கும், ஆத்தூர் மூர்த்தி ராசிபுரம், சங்கரன்கோவில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர் புளியங்குடிக்கும், அவருக்கு பதில் புளியங்குடியில் இருந்து ஜெயபால் மூர்த்தி, சங்கரன்கோவிலுக்கும், தேனி அல்லிநகரம் அறிவுச்செல்வம், தாம்பரத்திற்கும், திருமங்கலம் மணிகண்டன் மேலூரில் இருந்து பல்லவபுரத்திற்கும், பல்லவபுரம் கோவிந்தராஜ் திருமங்கலத்திற்கும், சுகாதார அலுவலர்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று சுகாதார ஆய்வாளர்கள் அலி வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நகராட்சிக்கும், சீனிவாசன் பேரணாம்பட்டுக்கும், போடி லெனின் கம்பதிற்கும், கம்பம் ஜெயசீலன் போடிநாயக்கனூர் , ஆம்பூர் சிவமுருகன் மறைமலைநகருக்கும், விக்கிரமசிங்கபுரம் கணேசன் காயல்பட்டினத்திற்கும், புதுக்கோட்டை சந்திரா ஸ்ரீவில்லிபுத்தூர்க்கும், அம்பாசமுத்திரம் பொன்ராஜ், விக்ரமசிங்கபுரத்திற்கும், நரசிங்கபுரம் சரவணன் மணப்பாறை காயல்பட்டினம் சிதம்பர ராமலிங்கம், அம்பாசமுத்திரம் நகராட்சிக்கும், தென்காசி கைலாச சுந்தரம் புளியங்குடிக்கும், புளியங்குடி ஈஸ்வரன் தென்காசிக்கும், தென்காசி சிவா கடையநல்லூர் நகராட்சிக்கும், சங்கரன்கோவில் மாதவராஜ் குமார் தென்காசிக்கும், கடையநல்லூர் சேகர் தென்காசிக்கும், சங்கரன்கோவில் சக்திவேல் கடையநல்லூர் நகராட்சிக்கும், அவருக்கு பதில் மாரிச்சாமி சங்கரன்கோவிலுக்கும், தென்காசி மாரிமுத்து சங்கரன்கோவில் நகராட்சிக்கும், ராஜபாளையம் பழனிச்சாமி செங்கோட்டைக்கும், திருமங்கலம் சிக்கந்தர் அருப்புக்கோட்டை நகராட்சிக்கும், சசிகலா திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டிக்கும், தேனி, அல்லிநகரம் மாரிமுத்து பெரியகுளத்திற்கும், சிவகுமார் பல்லடத்தில் இருந்து கடலூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி மேற்கண்ட அனைவரும் அந்தந்த பணியிடங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய இடங்களில் உடனே பணியேற்கவுள்ளனர்.

Tags:    

Similar News