5 மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்': மக்களே எச்சரிக்கையாக இருங்க...

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-11-25 13:34 GMT

வானிலை ஆய்வு மைய செயற்கைக்கோள் படம்.

திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள பயிர்களுக்கு கடுமையான சேதம், மரங்களை வேரோடு பிடுங்குதல், முறையான / முறைசாரா குடியிருப்புகளுக்கு சேதம், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு, உள்நாடு / ஆற்றங்கரை வெள்ளம், கால்நடைகளுக்கு சேதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவடத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



Tags:    

Similar News