தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி

தமிழகம் சார்பில் பால் பவுடர், அரிசி, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பியதற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார்

Update: 2022-05-22 17:24 GMT

முதல்வர் ஸ்டாலின் - ரணில் விக்ரமகிங்க 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உள்பட 2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் சென்றன.  தமிழகம் சார்பில் கப்பலில் அனுப்பப்பட்ட பால் பவுடர், அரிசி, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கையை சென்றடைந்தது.

இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இலங்கை பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் இருந்து பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உள்பட 2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வந்து சேர்ந்தது.  இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News