அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் கொடுப்பட்ட புகைப்படத்துடன் பாஜக தலைவர் அர்ஜூனமூர்த்தி பதிவிட்டுள்ளார்.

Update: 2024-01-02 16:07 GMT

ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ராமர் கோயிலின் 'பிராண பிரதிஷ்டை'க்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பாரம்பரிய நகர பாணியில் கட்டப்பட்ட ராமர் கோயில் வளாகம் 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக இருக்கும் என்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத் ராய் முன்னதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ.யிடம் தெரிவித்தார். கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் மற்றும் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  பாஜக தலைவர்  அர்ஜுனமூர்த்தி சில படங்களுடன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 

அழைப்பிதழுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்

அந்த பதிவில்,  ரஜினிகாந்த் மற்றும் பிற தலைவர்கள் அழைப்பிதழை வைத்திருந்தனர். நடிகர் வெள்ளை குர்தா மற்றும் வேஷ்டி அணிந்திருந்தார். அவர் தனது வீட்டில் மற்றவர்களுடன் போஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அர்ஜுனமூர்த்தி, "இன்றைய நிகழ்வு என் வாழ்வின் சிறந்த அனுபவம்!" என்று பதிவிட்டுள்ளார்.

அர்ஜூனமூர்த்தி தகவல்

"எங்கள் அன்புக்குரிய தலைவர் திரு @rajinikanth அவரை அவரது இல்லத்தில் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி கும்பாபிேஷக நிகழ்ச்சிக்கு அயோத்தி, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா சார்பாக அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆர்.எஸ்.எஸ் அதிகாரிகளுடன் அழைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News