ரஜினி ட்விட்டர் முகப்பு படத்தில் தேசிய கொடி
பிரதமர் மோடி தேசிய கொடி படத்தை வைக்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார்.;
நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக அனைவர் வீட்டிலும் தேசியக்கொடி என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் 13-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
அத்துடன் இரண்டாம் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
அத்துடன் தனது ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது சமூக வலைப்பக்கங்களின் முகப்பு புகைப்படத்தில் தேசிய கொடியை பதிவேற்றம் செய்து, மூவர்ணக் கொடி நமக்கு வலிமையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட நம்மை ஊக்குவிக்கிறது என்று குறிப்பிட்டு பிரதமர் மோடி தேசிய கொடியை பதிவேற்றம் செய்த நிலையில், மத்திய அமைச்சர்கள், பாஜகவினர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தேசியக்கொடியை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள ப்ரொபைல் பிக்சரை மாற்றி தேசிய கொடியை பதிவேற்றம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததன் காரணமாக ரஜினிகாந்த் தனது முகப்பு படத்தை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது