ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது, வழக்கை சந்திக்க வேண்டும் -டிடிவி.தினகரன்
ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது, வழக்கை சந்திக்க வேண்டும், அதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு என தஞ்சையில் டிடிவி.தினகரன் பேட்டி.;
ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது, வழக்கை சந்திக்க வேண்டும், அதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு என தஞ்சையில் டிடிவி.தினகரன் பேட்டி.
தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இலக்கை அடையும் வரை நாங்கள் துவண்டு போக மாட்டோம், தேர்தல் வெற்றி தோல்விகளால் நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைத்தால் அது அவர்களது தவறு. நாங்கள் ஒரு சமூகப் பொறுப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அரசியலுக்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இல்லை. நோய்தொற்று சமூக பரவலாக ஆகிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் சொல்லும் போது, அதே நேரத்தில் பரவலை தடுப்பதற்காக அறிவுரை வழங்க வேண்டிய தமிழக முதல்வரே தஞ்சை, திருச்சி போன்ற இடங்களில் பொதுக்கூட்டங்களில் நாலாயிரம் ஐயாயிரம் பேரைக் கூட்டி நிகழ்ச்சி நடத்துகிறார். இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும். இதையெல்லாம் நாங்கள் நீதிமன்றத்தில் சென்று தடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தார். மேலும் மக்களுடைய மறதிதான் திமுகவின் மூலதனம், எதையெல்லாம் ஆறு மாதத்திற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்தார்களோ, அதை எல்லாம் தற்போது ஆதரிக்கிறார்கள். ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளிய கூடாது. தைரியமாக சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அது தான் அரசியல்வாதிக்கு அழகு. ஆளுநருக்கு முன்பு கருப்புக்கொடி காட்டி கோபேக்மோடிஎன ட்ரெண்டாகி கொண்டிருந்தது. தற்போது வெல்கம் மோடி என்பது ட்ரெண்டாகி கொண்டுள்ளது. ஸ்டாலினின் விடியல் அரசாங்கம் சாயம் வெளுத்துவிட்டது என அவர் தெரிவித்தார்.