தமிழ்நாட்டை விட்டு செல்ல ராஜேந்திர பாலாஜிக்கு தடை

ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு செல்ல தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-12 09:58 GMT

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவினில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் மூன்று கோடி முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் ராஜேந்திர பாலாஜி வெளியே வந்தார். சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லை தாண்டி செல்லக்கூடாது என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டாலும் பாஸ்போர்ட்டை அவரிடம் கொடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் தன்னுடைய சிகிச்சை முதல் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் வரை எதிலும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்துள்ளதால், நிபந்தனை ஜாமீனை தளர்த்த கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், விருதுநகர் மாவட்டத்தில் விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியது. இருப்பினும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் வகையில் தளர்வு அளிக்க மறுத்துவிட்டது.

அத்துடன் ராஜேந்திர பாலாஜி அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீன் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது 

Tags:    

Similar News